Papanasam: `` பாபநாசம் படத்திற்குப் பிறகு போலீஸ் கேரக்டர்கள் மட்டுமேதான் வந்தது!...
தீ விபத்தில் முதியவா் உயிரிழப்பு
மதுரை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், மஞ்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முத்துவீரன் மகன் வேலு (75). இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, படுக்கை மெத்தையில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த வேலு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், உயிரிழந்த வேலுவுக்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்ததாம். படுத்திருந்த போது, புகைப் பிடித்ததால் மெத்தையில் தீ பரவி உயிரிழந்தது தெரியவந்தது.