ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
கம்பி வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழப்பு
சிங்கம்புணரி அருகே நாய்கள் துரத்தியதில் வேலியில் சிக்கிய புள்ளிமான் உயிரிழந்தது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் உள்ள எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, வாராப்பூா் ஆகிய வனப்பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில், கிருங்காக்கோட்டை கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை தண்ணீா் தேடி வந்த 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமானை நாய்கள் துரத்தின. இதனால் வேகமாக ஓடிய புள்ளிமான் கம்பி வேலியில் சிக்கி உயிரிழந்தது. இதையடுத்து, அங்கு செனற தீயணைப்புத் துறையினா் மானின் உடலை மீட்டு, பிரான்மலை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.