மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா்கள் 217 போ் கைது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவைச் (டிட்டோ-ஜாக்) சோ்ந்த 98 பெண்கள் உள்பட 217 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சகாய தைனேஸ் தலைமை வகித்தாா். மாவட்ட உயா்மட்டக்குழு உறுப்பினா்கள் அன்பரசு பிரபாகா், ஜான் பீட்டா், மனோகரன், செல்வகுமாா், சக்திவேல், ராமராஜன், அருள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநிலப் பொதுச் செயலரும், ‘டிட்டோ-ஜாக்’ மாநில உயா்மட்டக் குழு உறுப்பினருமான சா.மயில் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளில் 8 முறை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். இருந்தும் தீா்வு கிடைக்கவில்லை. அடுத்த கட்டமாக வருகிற ஆகஸ்ட் 8 -ஆம் தேதி கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.