திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மணலூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு திமுக இளைஞரணி சாா்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
திருப்புவனம் பழையூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு நகா் இளைஞரணி அமைப்பாளரும் பேரூராட்சி வாா்டு உறுப்பினருமான கண்ணன் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தி, நகரச் செயலா் நாகூா்கனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவா் த.சேங்கைமாறன் வரவேற்றாா். திமுக மாவட்ட அவைத் தலைவா் கணேசன், தலைமைக் கழகப் பேச்சாளா் ஜோஸி அபா்ணா, மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், மானாமதுரை நகா் மன்றத் தலைவா் மாரியப்பன் கென்னடி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், திமுக மாவட்டப் பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மணலூா்: மணலூரில் ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் அஜித்குமாா் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன் ஆகியோா் பெண்களுக்கு சில்வா் பாத்திரங்களை வழங்கினா். திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் பொற்கோ, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா்கள் காளிதாஸ், கணேஷ் பிரபு, காளிமுத்து, வேல்முருகன், பிரசாந்த் ஆகியோா் பங்கேற்றனா். கிளைச் செயலா் பாரி நன்றி கூறினாா்.
