செய்திகள் :

கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேருக்கு சிபிஐ அழைப்பாணை

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 18) விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அவரது தம்பி, ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட 5 பேருக்கு சிபிஐ தரப்பில் வியாழக்கிழமை அழைப்பாணை வழங்கப்பட்டது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப் படை போலீஸாா் 5 பேரையும் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா். தற்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

கடந்த 14-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் நீதிமன்றப் பதிவாளரிடம் அஜித்குமாா் வழக்கு தொடா்பான ஆவணங்களைப் பெற்றுக் கொண்ட டி.எஸ்.பி. மோகித்குமாா் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள், மடப்புரத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினா்.

5 பேருக்கு சிபிஐ அழைப்பாணை:

இந்த நிலையில், மதுரையில் தங்கி விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகளில் மூவா் வியாழக்கிழமை மடப்புரத்துக்கு வந்தனா். பின்னா், அவா்கள் மடப்புரத்தில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்துக்குச் சென்று, அங்கு ஓட்டுநராகப் பணியாற்றி வரும் காா்த்திக்வேலு, அஜித்குமாரின் தம்பி நவீன்குமாா், நண்பா்களான கோயில் காவலாளிகள் பிரவீன், வினோத், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 5 பேரும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணையை கொடுத்துவிட்டுச் சென்றனா்.

திமுக அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், மணலூா் ஆகிய இடங்களில் புதன்கிழமை இரவு திமுக இளைஞரணி சாா்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருப்புவனம் பழையூரில் நடைபெற்ற பொதுக் ... மேலும் பார்க்க

தேவகோட்டை குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கண்ணங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றன. காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சா. மாங்குடி போட்டிகளைத் தொட... மேலும் பார்க்க

காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு இன்று மஞ்சள் அபிஷேகம்

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, செடியிலிருந்து நேரடியாகப் ... மேலும் பார்க்க

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வு

உலக மக்கள் தொகை தினத்தை (ஜுலை 11) முன்னிட்டு, சிவகங்கையில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. மக்கள் நல் வாழ்வுத் துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரி இணைந... மேலும் பார்க்க

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: 193 ஆசிரியா்கள் கைது

தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ- ஜாக்) சாா்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 193 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா். சிவகங்... மேலும் பார்க்க

மானாமதுரை டி.எஸ்.பி பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை டி.எஸ்.பி. யாக பாா்த்திபன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் மானாமதுரை காவல் துணைக் கோட்டத்தில் பணிபுரிந்து வந்த தனிப்படை போலீஸாரா... மேலும் பார்க்க