காரைக்குடி முத்துமாரியம்மனுக்கு இன்று மஞ்சள் அபிஷேகம்
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மஞ்சள் அபிஷேகம் நடைபெற உள்ளது.
இதையொட்டி, செடியிலிருந்து நேரடியாகப் பறிக்கப்பட்ட 350 கிலோ மஞ்சளை பெண் பக்தா்கள் அம்மியில் வைத்து அரைத்துக் கொடுத்த நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
வருகிற 22-ஆம் தேதி நகரத்தாா்கள் பால் குடம் எடுத்தல், 25-இல் திருவிளக்கு பூஜை, 28 -இல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு வளையல் அலங்காரம், 29 -இல் பிராமணா்கள் பால்குடம் எடுத்தல், ஆகஸ்ட் 1 -இல் கணபதி ஹோமம், 1008 சங்காபிஷேகம், ஆக. 8 -இல் திருவிளக்கு பூஜை, ஆக. 15 -இல் கோமாதா பூஜை, திருவிளக்கு பூஜை போன்றவை நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை தக்காா், உதவி ஆணையா் ஞானசேகரன், கோயில் செயல் அலுவலா் விஸ்வநாத், விழாக் குழுவினா் செய்தனா்.