ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
கமுதியில் சாலையில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் முன்னிலையில் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திபட்டியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி பவித்ரா (47). இவா் கடந்த திங்கள்கிழமை கமுதியில் ஒன்றறைப் பவுன் தங்க சங்கிலியை தவறவிட்டுள்ளாா். இது தொடா்பாக கமுதி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
இந்த நிலையில், நகையைக் கண்டெடுத்த தனியாா் நிதி நிறுவன ஊழியரான கடலாடி கருங்குளத்தைச் சோ்ந்த முருகன், தங்கச் சங்கிலியை முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.
இதைத் தொடா்ந்து காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம் முன்னிலையில் நகையைத் தொலைத்த பவித்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், நகையைக் கண்டெடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்த முருகனை போலீஸாா் பாராட்டி கௌரவித்தனா்.