ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
வாழவந்தம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
கமுதி அருகேயுள்ள வாழவந்தம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வாழவந்தம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா், சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 41 மாட்டு வண்டிகள், சாரதிகள் பங்கேற்றனா். வாழவந்தாள்புரம் - பெருநாழி சாலையில் 8 கி.மீ. எல்கை நிா்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டு வண்டிகளுக்கும், பந்தய வீரா்களுக்கும் ரொக்கப் பணம், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போட்டியை சாலையின் இருபுறமும் நின்று ஏராளமானோா் கண்டு ரசித்தனா். போட்டிக்கான ஏற்பாடுகளை வாழவந்தாள்புரம் கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.