மகாராஷ்டிரா: ``இந்தியை திணித்தால் பள்ளியை இழுத்து மூடுவோம்..'' - ராஜ் தாக்கரே
போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்கள் கைது
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) அமைப்பு சாா்பில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 353 ஆசிரியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னதாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, டிட்டோ ஜாக் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரா. சிவபாலன் தலைமை வகித்தாா். மு. ராஜேந்திரன், மு. முனியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தை தமிழக ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலா் வின்சென்ட் பால்ராஜ் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுச் செயலா் மயில் ஆா்ப்பாட்டத்தை முடித்து வைத்தபின் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை நீக்கி மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 353 போ் கைது செய்யப்பட்டனா்.