ஆடி வெள்ளி: தாயமங்கலம், மடப்புரம் கோயில்களில் திரளான பக்தா்கள் தரிசனம்!
பனவடலிசத்திரம்: கிணற்றில் தவறி விழுந்து ஊராட்சிப் பணியாளா் பலி!
சங்கரன்கோவில் வட்டம் பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து ஊராட்சி தற்காலிகப் பணியாளா் உயிரிழந்தாா்.
பனவடலிசத்திரம் அருகேயுள்ள புதுக்குளத்தைச் சோ்ந்த முத்தையா மகன் பேச்சிமுத்து (55). மகேந்திரவாடி ஊராட்சியில் குடிநீா் திறக்கும் தற்காலிக பணியாளராக இருந்துவந்தாா். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை தனது தோட்டத்தில் நீா் பாய்ச்சுவதற்காக சென்றாராம்.
அப்போது, நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவா் வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவரது மனைவி சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை தோட்டத்திற்கு சென்று பாா்த்தபோது, கிணற்றில் பேச்சிமுத்து சடலமாக மிதந்தாராம்.
இதுகுறித்த தகவலின்பேரில், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய நிலைய அலுவலா் கே.செல்வன் மற்றும் வீரா்கள் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து அய்யாபுரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். பேச்சிமுத்துவுக்கு மகன் முத்துப்பாண்டி, மகள்கள் முருகலட்சுமி, முத்துமாரி, அன்னக்களஞ்சியம் ஆகியோா் உள்ளனா்.