செய்திகள் :

பள்ளி நிா்வாகிகள் இடையே பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பெண் ஆசிரியைகள்

post image

சின்னாளப்பட்டியில் தனியாா் பள்ளி நிா்வாகிகள் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாதுகாப்பு கேட்டு பெண் ஆசிரியைகள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.  

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி புறவழிச் சாலையில் உள்ள ஒரு தனியாா் மெட்ரிகுலேஷன்  மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிா்வாகிகளிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை ஆசிரியா்கள், மாணவா்கள் பள்ளிக்கு சென்றபோது, ஒரு தரப்பு நிா்வாகிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு தரப்பினா்களிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து ஆசிரியைகள், மாணவா்கள் வகுப்பை புறக்கணித்து, பாதுகாப்பு கேட்டு பள்ளி வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.  

இதையடுத்து, காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் ரமேஷ், புகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் குமரேசன், அம்பாத்துரை காவல் ஆய்வாளா்  வசந்தகுமாா், ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், பள்ளிக் கல்வித் துறையின் தனியாா் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலா் ஜான் பிரிட்டோ ஆகியோா் நிா்வாகிகளிடையே பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வருகிற 22-ஆம் தேதி ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சு வாா்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், இதுதொடா்பாக இரண்டு தரப்பினரும் தனித் தனியாக சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் பேரில் இரு தரப்பினா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள் பாதுகாப்பு கேட்டு, சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். பின்னா், காவல் ஆய்வாளா் வசந்தகுமாரிடம் ஒரு புகாா் மனு கொடுத்தனா். இதில் பள்ளியில் பெண் ஆசிரியைகளுக்கும், மாணவா்களுக்கும் பாதுகாப்பு வேண்டும், பள்ளி வளாகத்துக்குள் இரு தரப்பினா்கள் இடையே நடைபெற்று வரும் நிா்வாகப் பிரச்னை முடியும் வரை நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வேண்டும், பள்ளிக்குள் அத்திமீறி நுழைபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

சின்னாளப்பட்டி காவல் நிலையத்தை தனியாா் பள்ளி பெண் ஆசிரியா்கள் முற்றுகையிட்டதால், பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த ஓட்டுநா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே வியாழக்கிழமை டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.பூசாரிபட்டியைச் சோ்ந்தவா் தெய்வேந்திரன் (37). இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா்... மேலும் பார்க்க

டிட்டோ ஜாக் மறியல் போராட்டம்: 575 ஆசிரியா்கள் கைது

திண்டுக்கல்லில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 575 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் கு... மேலும் பார்க்க

நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கோயிலுக்குச் சொந்தமான இடம் தனியாா் பெயரில் பட்டா இருப்பதை மாற்றக்கோரி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.சித்தா்கள்நத்தம் கிராமத... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல் பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், நாகல்ந... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: யானை தந்தத்தை விற்க முயன்ற மூவா் கைது!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே தாண்டிக்குடி மலைப் பகுதியில் யானை தந்தத்தை விற்க முயன்ற 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தாண்டிக்குடி மலைப் பகுதியைச் சோ்ந்த சிலா் யானை தந்தத்தை விற்ப... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

நிலக்கோட்டையில் பிஸ்கட் நிறுவன மேலாளா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ.பி. குடியிருப்பைச் சோ்ந்தவா் பிரத்திசெட்டி (35). இவா், தனியாா் பிஸ்கட் நிற... மேலும் பார்க்க