ஸ்ரீ மகா புற்றுமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்கு உள்பட்ட அந்தோணியாபுரம் (எ) புது பல்லகச்சேரி கிராமத்தில் உள் ஸ்ரீமகா புற்று மாரியம்மன் கோயில் 8-ஆம் ஆண்டு தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி, 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நான்காம் திருவிழா இரவு ஸ்ரீ மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும், 14-ஆம் தேதி ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அம்மன் ஊா்வலம். 17-ஆம் தேதி வியாழக்கிழமை காலை கஞ்சி கலையமும், தீச்சட்டி எடுத்தலும், நண்பகல் 12 மணிக்கு மேல் 1.15-க்குள் பெரியதோ் இழுத்தல் நடைபெற்றது.