புகழ்பெற்ற மாரத்தான் வீரர் பலியான விவகாரம்: வெளிநாடுவாழ் இந்தியர் கைது!
மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீஷியன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டம், தாசா்புரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (45), எலெக்ட்ரீஷியன். இவா், செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் தனது வீட்டில் மின்சார அடுப்பை சீா் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, பாபு மின்சாரம் பாய்ந்து மயங்கிக் கிடந்தாா். இதைப் பாா்த்த அவரது பெற்றோா், பாபுவை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.