செய்திகள் :

``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர் அணி சரவணன்

post image

"ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி மூலம் 91 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் என்று மிகப்பெரிய புளுகு மூட்டையை உதயநிதி அவிழ்த்து விட்டுள்ளார்." என்று, அதிமுக மருத்துவர் அணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 7 ஆம் தேதி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கோவையிலிருந்து தொடங்கிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் கடல் அலைபோல திரண்டு எழுச்சியான வரவேற்பு அளிக்கிறார்கள்.

இன்றைக்கு தமிழகம் முழுவதும் எடப்பாடியாரின் அலை வீசுகிறது. அதைக்கண்டு ஸ்டாலினுக்கு ஜுரமும், அவர் மகன் உதயநிதிக்கு நடுக்கமும் வந்துவிட்டது. அதனால் தங்கள் இருப்பை கேட்டுக்கொள்ள நாள்தோறும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி டெபாசிட் வாங்க முடியாது என்றும், ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி மூலம் 91 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள் என்றும் மிகப்பெரிய புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

தமிழகத்தில் 6 கோடிக்கும் அதிகமாக வாக்காளர்கள் உள்ளனர், இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். அது மட்டுமின்றி எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தின் மூலம் ஒரு கோடிக்கும் மேலான வாக்காளர்கள் அவரை ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

திமுக கொடுத்த 525 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவிகிதத்தைக்கூட நிறைவேற்றவில்லை. கேஸ் மானியம் ரூ 100, மாணவர்களின் கல்விக்கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து என்று எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தற்போது உணவுப்பொருள்களின் விலை 30 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளதன் காரணமாக திமுகவுக்கு 10 சதவிகித வாக்குகள் சரிந்துவிட்டது.

டாக்டர் சரவணன்

அதனால் தாங்கள் செய்த தவறை மடைமாற்றம் செய்து பொதுமக்கள் திமுகவை மதிப்பதுபோல் ஒரு தோற்ற்ததை உருவாக்க ஓரணியில் தமிழ்நாடு என்று உறுப்பினர் சேர்க்கையை நடத்துகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரு ஸ்டிக்கரை மட்டும் வீட்டு வாசலில் ஒட்டி வைத்துவிட்டு அதை உறுப்பினர் சேர்க்கை என்று கணக்கெடுத்துக்கொள்கிறார்கள்.

இன்றைய சூழலில் ஸ்டாலின் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசுவதால் 2011 தேர்தலைப்போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலரும். திமுகவின் பொய்ப்பிரசாரம் மக்களிடம் ஒருபோதும் எடுபடாது" என்று தெரிவித்துள்ளார்

``இந்தியா, சீனா, பிரேசில் புதினிடம் பேசுங்கள்; இல்லையென்றால்..'' - நேட்டோ எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 'வரி' அலை மீண்டும் சுழற்றி அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 50 நாள்களுக்குள் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம், மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டுமா?

Doctor Vikatan: ஒரு நாளைக்கு ஒரு நபர் எத்தனை முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். பச்சை முட்டை, வேகவைத்த முட்டை- இரண்டில் எது சிறந்தது, மஞ்சள் கருவைத் தவிர்க்க வேண்டும் என்பது உண்மையா? முட்டை அதிகம் எடுப்பதா... மேலும் பார்க்க

அம்மா சென்டிமென்டால் இணையும் Ramadoss - Anbumani ?|Seeman Passport Missing|Imperfect Show 15.7.2025

* கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று!* ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார்* 'உங்களுடன் ஸ்டாலின்' என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம் - ... மேலும் பார்க்க

Stalin-க்கு சுற்றி சுற்றி சிக்கல், முறியடிக்குமா புது Agenda? பதறும் மந்திரிகள்! |Elangovan Explains

அதிமுக-பாஜக தரும் நெருக்கடிகளை சமாளிக்க, 'உங்களுடன் ஸ்டாலின்' & 'ஓரணியில் தமிழ்நாடு' என இரண்டையும் கையிலெடுத்த மு.க ஸ்டாலின். 'அரசாங்கம்-கட்சி' நேரடியாக மக்களை சந்தித்தால், வாக்குகள் கிடைக்கும் என... மேலும் பார்க்க

Health: காபி நல்லதா; கெட்டதா? தெரிஞ்சுக்கலாம் வாங்க!

காலை விடிந்ததும் காபியின் முன்புதான் பலர் கண்விழிக்கிறார்கள். ஒரு கப் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படிக்காவிட்டால் சிலருக்குத் தலையே வெடித்துவிடும். அன்றைய பொழுது, பொழுதாகவே இருக்காது. வீடாக இருக்கட்டும... மேலும் பார்க்க

மெக்சிகோ தக்காளிக்கு 17% வரி விதித்த ட்ரம்ப்.. நஷ்டம் யாருக்கு?

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மெக்சிகோ தக்காளிகள் மீது 17 சதவிகித வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், அமெரிக்கா ஏப்ரல் மாதம் அறிவித்த வரி விதிப்பு அமலுக்... மேலும் பார்க்க