லார்ட்ஸ் டெஸ்ட்டில் வென்றும் 3-வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் வெற்றி பெற்றும் இங்கிலாந்து அணி 3-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் விளையாடி வருகிறது.
இந்தத் தொடரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றதன்மூலம், தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, போட்டி நேரத்தைவிட 2 ஓவர்கள் மெதுவாகப் பந்துவீசி, சரியான நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காத காரணத்துக்காக போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் 10 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளார்.
ஐசிசியின் சட்டவிதிகள் 2.22-ன் படி, இங்கிலாந்து அணி வீரர்கள், மாற்று வீரர்கள், வீரர்களின் பணியாளர்கள் என அனைவருக்கும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐசிசியின் சட்டப்பிரிவு 16.11.2-ன் கீழ் உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் தொடரில் விளையாடும் அணிகள் மெதுவாக வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளிகள் வீதம் குறைக்கப்படும். அதன்படி, இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கான 36 புள்ளிகளில் 24-லிருந்து 22 ஆகக் குறைந்துள்ளது. இதனால், 66.67 சதவிகிதத்திலிருந்து 61.11 சதவிகிதமாகவும் குறைந்திருக்கிறது. இதனால், இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு சரிந்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் அணிகளின் தரவரிசை
ஆஸ்திரேலியா - 100 சதவிகிதம்
இலங்கை - 66.67 சதவிகிதம்
இங்கிலாந்து - 61.11 சதவிகிதம்
இந்தியா - 33.33 சதவிகிதம்
வங்கதேசம் - 16.67 சதவிகிதம்
மேற்கிந்திய தீவுகள் - 0
நியூசிலாந்து - 0
பாகிஸ்தான் - 0
தென்னாப்பிரிக்கா - 0
England docked WTC points for slow over-rate in Lord's Test, slip to 3rd in standings
இதையும் படிக்க :பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு!