ஜாதி ரீதியிலான கட்சிகள் நாட்டுக்கு ஆபத்தானவை- உச்சநீதிமன்றம் கருத்து
வேலைச் சுமையா? ஸ்டோக்ஸ் முன்மாதிரி, ஏமாற்றும் பும்ரா..! விமர்சித்த முன்னாள் வீரர்!
லண்டனில் நடைபெற்ற டெஸ்ட்டில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலும் பந்துவீச, பும்ரா ஏன் வேலைச் சுமை என பல போட்டிகளில் இருந்து ஒதுங்குகிறார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் கடைசி நாளில் இந்தியாவுக்கு 135 ரன்கள் தேவையான நிலையில் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலும் சிறப்பாக பந்துவீசி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்தியாவின் பும்ரா வேலைச் சுமை என கடந்த டெஸ்ட்டில் விளையாடவில்லை. இது குறித்து இர்ஃபான் பதான் கூறியதாவது:
ஏமாற்றம் அளிக்கும் பும்ரா
ஐந்தாம் நாளில் காலையில் பென் ஸ்டோக்ஸ் 9.2 ஓவர்கள் வீசுகிறார்.
என்ன மாதிரியான ஒரு வீரர் ஸ்டோக்ஸ். அவர் பந்துவீசுகிறார், பேட்டிங் செய்கிறார், ரிஷப் பந்த் விக்கெட்டை ரன் அவுட்டில் எடுத்தார். அவர் இந்த வேலைச் சுமைக் குறித்து பேசுவதில்லை.
இந்தியாவில், அப்படி இல்லை. பும்ரா 5 ஓவர்கள் வீசிவிட்டால் பிறகு ஜோ ரூட் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு, எப்படி இரண்டாம் இன்னிங்ஸில் போட்டியைக் கட்டுப்படுத்துவது? இது மிகவும் ஏமாற்றம் அளிக்கக்கூடியது.
பும்ராவுக்கு என்ன வேலைச் சுமை இருக்கிறது?
எட்ஜ்பாஸ்டனில் பும்ரா விளையாடாமல் அவரது வேலைச் சுமையைக் குறைத்தார்கள்.
கிரிக்கெட் விளையாட வந்துவிட்டால் வேலைச் சுமை கிடையாது. எப்படியானாலும் வெற்றிப்பெற வேண்டும். இந்திய அணி இதைச் சரியாக அணுக வேண்டும்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடும் ஆர்ச்சர் நிற்காமல் பந்துவீசுகிறார். காலையில் 6 ஓவர் ஸ்பெல் வீசுகிறார்.
பென் ஸ்டோக்ஸ் 9 ஓவர்கள் வீசும்போது இந்தியர்கள் ஏன் பின் தங்குகிறார்கள்? என்றார்.