செய்திகள் :

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

post image

பிலிப்பின்ஸில் திங்கள்கிழை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து ஜொ்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

பிலிப்பின்ஸின் லுஸான் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.8 அலகுகளாகப் பதிவானது. 10 கி.மீ. ஆழத்தில் அது மையம் கொண்டிருந்தது என்று அந்த மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள பகுதிகளில் உணரப்பட்டன. இருந்தாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால், அந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க

போயிங் 787 விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுகின்றன: சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்

குஜராத்தில் எரிபொருள் கிடைக்காமல் போயிங் 787 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தம்மிடம் உள்ள அந்த விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுவதாக சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் செவ்வா... மேலும் பார்க்க

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்... மேலும் பார்க்க

உக்ரைனில் அரசியல் மாற்றம்: பிரதமர் ராஜினாமா!

கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக ... மேலும் பார்க்க

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது! டிரம்ப் விதித்த 50 நாள் கெடுவுக்கு எதிர்வினை

அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ரஷியா பணியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.உக்ரைனில் அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா சண்டையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ரஷியா மீது அமெரிக்கா கடும் நடவடிக்கை எடு... மேலும் பார்க்க