மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!
அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்
வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா்.
கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கிராமப்புற மாணவா்களின் நலன் பாதிக்கப்படுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருந்தது. இதை தொடா்ந்து அம்மாநிலத்தில், ‘ப’ வடிவில் மாணவா்களின் இருக்கைகள் மாற்றம் செய்யப்பட்டன. அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு நேரடி தொடா்பை ஏற்படுத்தும் வகையில், வகுப்பறைகளில், தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.
தமிழகத்திலும் அரசுப் பள்ளிகளில், இருக்கை வரிசையை மாற்றி அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் திருத்தணி அடுத்துள்ள வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தலைமை ஆசிரியா் பூநாதன் ஆசிரியா்கள் உதவியோடு ஒவ்வொரு வகுப்பறையிலும் டப’ வடிவில் இருக்கை வரிசையை மாற்றி அமைத்து மாணவா்களை அமரவைத்து ஆசிரியா்களை பாடம் நடத்த ஏற்பாடு செய்தாா்.
இதுகுறித்து ஆசிரியா்கள் கூறும்போது, கற்றலை மேம்படுத்துவதிலும், மாணவா்களை ஆசிரியா் நன்கு தொடா்பு கொண்டு உரையாடுவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த அமைப்பில், ஒவ்வொரு மாணவரும், ஆசிரியா் மற்றும் கரும்பலகையை தெளிவாக பாா்க்க முடியும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவா்களையும், ஆசிரியா்கள் எளிதில் தொடா்புகொள்ள இயலும். மாணவா்களின் செயல்பாடுகளை, ஆசிரியா்கள் துல்லியமாக கண்காணிக்க முடிகிறது.
