பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு நடத்திருப்பதாகத் தணிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் கிரிக்கெட் வாரியம் 2023-2024 ஆம் நிதியாண்டில், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 530 கோடி(இந்திய மதிப்பில் ரூ.180 கோடி) வரை முறைகேடு நடைபெற்றிருப்பதாகத் தணிக்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அணிக்கான ஸ்பான்ஸர்ஷிப்பில் இந்த முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான மோஷின் நக்வி, மத்திய உள்துறை அமைச்சராகவும் உள்ளார். அவரின் தலைமைப் பதவிக்கு இந்த முறைகேடுகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி - மார்ச் மாதங்களில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களின் உணவுக்காக மட்டும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் சுமார் 6.3 கோடி செலவிடப்பட்டிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சர்வதேச அணிகளின் பாதுகாப்புக்கு அரசே பொறுப்பு, அது கிரிக்கெட் வாரியத்தின் நிதிகளில் வராது என்றும் தணிக்கை குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும், ஜூனியர் அணிக்கு சரியான தகுதிகூட இல்லாத மூன்று பயிற்சியாளர்களை நியமித்திருந்ததையும் தணிக்கைக் குழு கண்டறிந்துள்ளது. சட்டத்தின் படி, கிரிக்கெட் வாரிய நிதியை செலவளிக்க தலைவருக்கு முழு உரிமை உள்ளது என்ற கருத்தையும் தணிக்கைக் குழு நிராகரித்துள்ளது.
Audit finds $21M financial irregularities in Pakistan Cricket Board
இதையும் படிக்க :தடியடி.. கண்ணீர் புகை குண்டு வீச்சு..! மாணவி தற்கொலையால் பரபரக்கும் போராட்டக்களம்!