உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் ஜோ ரூட்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் தொடர், தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே ஆகிய தொடர்களும் நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் புதன்கிழமை ஐசிசியின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, இந்தவார ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 104, 40 ரன்கள் விளாசிய ஜோ ரூட் 888 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டு இடங்கள் சரிந்து மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் 3-வது இடத்துக்கு வந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறியுள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்ட்டில் சொதப்பிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஒரு இடமும், கேப்டன் ஷுப்மன் கில் இடங்களும் சரிவைக் கண்டுள்ளனர். இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் ஒரு இடம் சரிவைக் கண்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களின் தரவரிசை
1. ஜோ ரூட் - 888 புள்ளிகள்
2. கேன் வில்லியம்சன் - 867 புள்ளிகள்
3. ஹாரி புரூக் - 862 புள்ளிகள்
4. ஸ்டீவ் ஸ்மித் - 816 புள்ளிகள்
5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 801 புள்ளிகள்
6. டெம்பா பவுமா - 790 புள்ளிகள்
7. கமிந்து மெண்டிஸ் - 781 புள்ளிகள்
8. ரிஷப் பந்த் - 779 புள்ளிகள்
9. ஷுப்மன் கில் - 765 புள்ளிகள்
10. ஜேமி ஸ்மித் - 752 புள்ளிகள்
JOE ROOT - THE NEW NO.1 RANKED ICC TEST BATTER
இதையும் படிக்க :லார்ட்ஸ் டெஸ்ட்டில் வென்றும் 3-வது இடத்துக்கு சரிந்த இங்கிலாந்து!