நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!
திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்பட்டுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி ஊராட்சி பகுதியில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்தக் குப்பை கிடங்கில் பலத்த காற்று வீசியதன் காரணமாக, திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ அதிகமாக இருப்பதால் சாலைகளைப் பயன்படுத்தத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையைப் பயன்படுத்தத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், மாற்று வழிப்பாதைகளில் வாகனத்தை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?