உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகின்றது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில், 11 மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.