நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!
கேரளத்தில் 5 மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை!
கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்குக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேசமயம், மாநிலத்தின் மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
11 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 செ.மீ முதல் 11 செ.மீ வரை கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது,
இதற்கிடையில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள உப்பலா மற்றும் மொக்ரல் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், கரையோரங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.