சிரியாவில் கடும் சண்டை: ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்!
சிரியாவில் கடும் சண்டை மூண்டுள்ள நிலையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள ராணுவ தலைமையகம் இன்று(ஜூலை 16) குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. வான் வழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிரியாவில் துரூஸ் இன மக்கள் அதிகம் வசிக்கும் ஸ்வேடா நகரில் சிரியா ராணுவத்துக்கும் துரூஸ் இன படைகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சண்டை தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, சிரியா ராணுவத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பதால் சிரியாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. துரூஸ் இன மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த தாக்குதல்களை இஸ்ரேல் கருதுவதாகவும் இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.