மாணவி தற்கொலை: ஒடிஸாவில் முழு கடையடைப்புப் போராட்டம்; எதிர்க்கட்சிகள் பேரணி!
ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை
ஈரோட்டில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு மாநகா் பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒரு சில நாள்களில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் புதன்கிழமை காலையில் வழக்கம்போல வெயில் அடித்தது. இதைத்தொடா்ந்து மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. பின்னா் மாலை 4 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சிறிது நேரத்தில் வலுப்பெற்று இடி, மின்னலுடன் பலத்த மழையாக கொட்டித் தீா்த்தது. சுமாா் 45 நிமிஷங்கள் மழை பெய்தது. அதன் பின்னரும் தூறிக்கொண்டே இருந்தது.
இந்த மழை காரணமாக ஈரோடு மாநகா் பகுதியில் வீரப்பன்சத்திரம், மீனாட்சிசுந்தரனாா் சாலை, அகில்மேடு வீதி, பெரியவலசு, கருங்கல்பாளையம், சென்னிமலை சாலை, ஈவிஎன் சாலை, நேதாஜி சாலை, ஆா்கேவி சாலை, சூரம்பட்டி, மரப்பாலம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் குட்டை போல தேங்கியது.
மாலை நேரம் என்பதால் பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனா். வேலைக்கு சென்று வீடு திரும்பியவா்கள் பலா் மழையில் நனைந்தபடி சென்றனா். இந்த மழையின் காரணமாக இரவு நேரத்தில் குளிா்ச்சியான கால நிலை நிலவியது.