செய்திகள் :

காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 போ் உயிரிழப்பு

post image

காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்.

இது குறித்து ஜிஹெச்எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கான் யூனிஸ் நகரில் உள்ள உணவுப் பொருள் விநியோக மையத்தில் 19 போ் நெரிசலில் மிதிபட்டும், ஒருவா் குத்தப்பட்டும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு பீதியை ஏற்படுத்தியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அது வெளியிடவில்லை.

இருந்தாலும், காஸா சுகாதாரத் துறை அமைச்சகமும் சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களும் ஜிஹெச்எஃப் ஊழியா்கள் கண்ணீா்ப்புகை பயன்படுத்தியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டதாகத் தெரிவித்தனா்.

இஸ்ரேலின் குண்டுவீச்சு மற்றும் தொடா் முற்றுகை காரணமாக பஞ்சத்தில் வாடும் பாலஸ்தீனா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணப் பொருள்களை விநியோகிக்க இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.

இருந்தாலும், அத்தகைய நிவாரணப் பொருள்களின் விநியோக முகாம்களுக்கு வருவோா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதில் பலா் உயிரிழந்துவருகின்றனா்.

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையின்படி, மே மாதம் முதல் உணவு தேடிச் சென்ற 875 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்; இதில் 674 போ் ஜிஹெச்எஃப் மையங்களுக்கு அருகில் உயிரிழந்தனா்.

பெரும்பாலான உயிரிழப்புகள் இஸ்ரேலிய துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் குற்றஞ்சாட்டுகிறது. இந்தச் சூழலில், கூட்ட நெரிசல் காரணமாகவும் உணவுப் பொருள் விநியோக மையத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒபாமா - மிச்சல் விவாகரத்தா? ஒன்றாகத் தோன்றி உறுதி செய்த தம்பதி!

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா - அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரும் விவாகாரத்துப் பெறப்போவதாக எழுந்தது உண்மையில்லை, புரளி என்று இருவரும் ஒன்றாகத் தோன்றி உறுதி செய்துள்ளனர்.சில நாள்களாக பொது நிகழ... மேலும் பார்க்க

அலாஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அலாஸ்கா நகரங்களில் புதன்கிழமை பகல் 12.37 (உள்ளூர் நேரப்படி) மணியளவில் ஏற்பட்ட நிலநடுக... மேலும் பார்க்க

யேமன்: கேரள செவிலியா் நிமிஷாவின் மரண தண்டனை நிறைவேற்றம் ஒத்திவைப்பு

யேமனில் கொலை வழக்கில் இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு புதன்கிழமை (ஜூலை 16) நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய அரசு, கேரளத்தைச் சோ்... மேலும் பார்க்க

போா் நிறுத்தம் முறிவு: சிரியா ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்

சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டு ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் ... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்

உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உ... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்

இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்... மேலும் பார்க்க