அனுபமாவின் பரதா: ரிலீஸ் தேதியுடன் வெளியான 2-ஆவது பாடல்!
நடிகை அனுபமா நடித்துள்ள பரதா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது.
பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் அறிமுகமான அனுபமா தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, பிரபல இயக்குநர் பிரவீன் கந்த்ரெகுலா இயக்கியுள்ள பரதா படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் முக்கியக் கதாபாத்திரமாக சுப்புவாகவும், நடிகை சங்கீதா, ஜெய ஜெய ஜெய ஜெய ஹே பட நடிகை தர்ஷனா ராஜேந்திரனும் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
கிராமங்களில் பெண்கள் பர்தா அணிவது, அவர்களை அடிமைகளாக சித்திரிக்க ஆண்கள் கொண்டுவந்த வழக்கம் என்று கூறப்படுகிறது.
பர்தா அணிவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலையை கதைக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் உகலம் முழுவதும் வரும் ஆகஸ்ய் மாதம் 22ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. தற்போது, இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது.