காஸாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பேர் கொலை!
15 ஆண்டுகள் பேட்டரி வாரண்டியுடன் டாடா எலக்ட்ரிக் கார்கள்! முழு விவரம்!
டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் மாடல் எலக்ட்ரிக் கார்களுக்கு 15 ஆண்டுகால பேட்டரி வாரண்டி வழங்கியுள்ளது.
முன்னதாக டாடா ஹாரியர் எலக்ட்ரிக் மாடல் காருக்கு இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் இரு மாடல்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் எலக்ட்ரிக் மாடல் கார் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டாடா எலக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 8 ஆண்டுகள் அல்லது ஒன்றரை லட்சம் கிலோ மீட்டர் பயணத்துக்கு பேட்டரி வாரண்டி வழங்கப்பட்டு வந்தது.
தற்போது வாகனம் பதிவு செய்யப்பட்டதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு எவ்வளவு கிலோ மீட்டர் ஓட்டினாலும் பேட்டரிக்கு வாரண்டி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிகத்துக்கு பயன்படுத்தினாலோ, டாடாவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரின் அறிவுறுத்தல்களை பின்பற்றாவிட்டாலோ இந்த சலுகை ரத்து செய்யப்படும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டாடா நிறுவனத்தின் கார்களை ஏற்கெனவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் டாடா நெக்சான் 45 மற்றும் கர்வ் எலக்ட்ரிக் கார்களை வாங்கினால் கூடுதலாக ரூ. 50,000 தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நெக்சான் 45 இவி காரின் ஆரம்ப விலை ரூ. 13.99 லட்சம், கர்வ் இவி ஆரம்ப விலை ரூ. 17.49 லட்சம் ஆகும்.