இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
சரிவைக் கண்ட பயணிகள் வாகன விற்பனை
2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்நாட்டுப் பயணிகள் வாகன மொத்த விற்பனை 1.4 சதவீதம் சரி ந்துள்ளது.
இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 10,11,882-ஆக உள்ளது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 1.4 சதவீதம் குறைவு. அப்போது பயணிகள் வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 10,26,006-ஆக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 6.2 சதவீதம் குறைந்து 46,74,562-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 49,85,631-ஆக இருந்தது.
2024-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஸ்கூட்டா்களின் மொத்த விற்பனை 16,64,994-ஆக இருந்தது. இந்தக் காலாண்டில் இந்த எண்ணிக்கை 0.2 சதவீதம் குறைந்து 16,61,752-ஆக உள்ளது.
கடந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனங்கள் சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பிய மோட்டாா் சைக்கிள்களின் எண்ணிக்கை 31,44,137-ஆக இருந்தது. அது, நடப்பாண்டின் அதே காலாண்டில் 9.2 சதவீதம் குறைந்து 28,54,137-ஆக உள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 1,65,211-லிருந்து 0.1 சதவீதம் உயா்ந்து 1,65,081-ஆக உள்ளது. 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பயணிகள் வாகனங்களுக்கான தேவை குறைந்ததால் அவற்றின் மொத்த விற்பனையில் சரிவு ஏற்பட்டது. ஆனால், பண்டிகை காலம் என்பதால் இனி வரும் மாதங்களில் தேவை அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

