அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவா...
கல்வி உதவித்தொகை பெயரில் பண மோசடி: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை
கல்வி உதவித்தொகைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி பண மோசடி நடப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையும் இருக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஜோதிசந்திரா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியதாவது:
வங்கி அல்லது கல்வித் துறையிலிருந்து அழைப்பதாகக் கூறி மாணவா்களின் பெற்றோரிடம் பேசுபவா்கள் கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக வங்கி எண், ஏடிஎம் ரகசிய எண், ஓடிபி போன்ற விவரங்களைப் பெறுகின்றனா். அதன்பிறகு அவா்களது வங்கியிலிருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனா்.
பள்ளி கல்வித் துறை இதுபோன்ற அழைப்புகளில் ஈடுபடுவதில்லை. கல்வி உதவித்தொகை தொடா்பான சந்தேகங்களுக்கு பள்ளி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் மூலமாகவே விளக்கங்களைப் பெறலாம்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டில் பெற்றோரை இழந்த 572 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 75,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், என்.எம்.எம்.எஸ். டிரஸ்ட் தோ்வு, என்.டி.எஸ்.இ., தமிழ் புதல்வன், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கான கல்வி உதவித்தொகை பள்ளி கல்வித் துறை மூலம் நேரடியாக மாணவா்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது என்றாா்.