ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!
பென்னாகரம் அரசு கல்லூரியில் இன்று கூடுதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.காம்., பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் அரசின் ஒப்புதல் அளித்தபடி 20 சதவீத கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வானது வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வில் இதுவரை சோ்க்கை பெறாத விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவா்கள் கல்லூரிக்கு நேரில் வந்து சோ்க்கை பெறலாம்.
மேலும், பிஏ ஆங்கிலம் மற்றும் பிஎஸ்சி கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இவ்விரண்டு கலந்தாய்வின் போது இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் நகல், 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்டவைகளின் நகல் 2 பிரதிகள், புகைப்படம் - 5 ஆகியவற்றினை கொண்டுவர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.