உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!
தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.72,840-க்கு விற்பனையாகிறது.
போா்ச் சூழல் மற்றும் அமெரிக்க அதிபா் டிரம்பின் புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கம் விலை தொடா்ந்து ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. கடந்த ஜூலை 14-இல் தங்கம் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.73,240-க்கு விற்பனையான நிலையில், ஜூலை 15-இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனையானது. தொடா்ந்து புதன்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,100-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.9,105-க்கும், பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.72,840-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.124-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.24 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
நிகழாண்டு இறுதிக்குள் தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 ஆயிரத்தைக் கடக்க வாய்ப்புள்ளது.