செய்திகள் :

பருவமழை தொடங்குவதற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை: முதல்வர்

post image

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூலை 17) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்றிட அறிவுறுத்தினார். குறிப்பாக, மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், துப்புரவுப் பணி மற்றும் தெருவிளக்குகள் பராமரிப்புப் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற அறிவிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள்  நிறைவேற்றி, பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலர்களை அறிவுறுத்தினார். 

கடந்த 4 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் 15 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டுள்ளதையும், கடந்த 4 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களுக்குப் பயனளிக்கக்கூடிய பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளான மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய குடிநீர்த் திட்டங்கள், மழைநீர் வடிகால் பணிகள் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சிகளில் 3,199 பணிகளும், நகராட்சிகளில் 4,972 பணிகளும் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல்வர், இப்பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கி, வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே முடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று, இறுதிக்கட்டத்தில் இருக்கின்ற பணிகள், பாதி முடிவுற்ற பணிகளையெல்லாம் போர்க்கால அடிப்படையில செய்து முடித்திட, மின் வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், நெடுஞ்சாலைகள் துறை, மாநகராட்சி நிர்வாகங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார். 

பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாகத் தாழ்வான பகுதிகள், வெள்ள அபாயம் இருக்கின்ற பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் அங்கு பணிகளை முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இதையும் படிக்க: கூட்டணி ஆட்சிதான்! அமித் ஷா சொல்வதைத்தான் நான் தூக்கிப்பிடித்தாக வேண்டும்: அண்ணாமலை

Chief Minister Stalin has advised that rainwater drains should be cleaned and a way for water to drain out before the monsoon season begins.

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி

மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கு: 5 பேருக்கு சிபிஐ சம்மன்!

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல் மரண வழக்கில் 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதா காரில் வைத்திருந்த தனது நகைகள் காணாமல் போனதாக த... மேலும் பார்க்க

காலையில் வெயில், மாலையில் மழை! காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் பலத்தமழை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த சூறைக்காற்று வீசுவதால் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தி வைக... மேலும் பார்க்க

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்து அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “... மேலும் பார்க்க

உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!

தமிழகத்தில் பெரும்பாலானவர்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் என்பதே. அது தொடர்பான தகவல்களை அளிக்க தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.அரசுத் துறைகளின் சேவைகளை, ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!

மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர... மேலும் பார்க்க