kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
கமல்ஹாசனுடன் திருமாவளவன் சந்திப்பு!
மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் \மக்கள் நீதி மய்யம் இணைந்த நிலையில் அந்த கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் என ஒப்பந்தமானது.
அதன்படி, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டார். வருகிற ஜூலை 25-ஆம் தேதி அவர் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார்.
இதையொட்டி அவர் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கமல்ஹாசனைச் சந்தித்தது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில்,
"திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ள
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 17, 2025
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமலஹாசன் @ikamalhaasan அவர்களை சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்! pic.twitter.com/zt74NtmeWR