UK: "இனி 16 வயது முதல் வாக்களிக்கலாம்" - தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு என்ன கார...
டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது
திருவள்ளூர்: இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ-ஜாக்) சாா்பில், வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் ஆட்சியா் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும் என டிட்டோ-ஜாக் சாா்பில்அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பி.ராஜாஜி, எஸ். பாலசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் டி.முருகன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜே.ஜான், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆர்.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போராட்டத்தை டிட்டோ-ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் இரா.தாஸ் தொடங்கி வைத்தார்.
அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் டிட்டோ-ஜாக் குழுவைச் சேர்ந்த 150 பேரை கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.
காமராஜர் விவகாரம்: கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர்- ஸ்டாலின்!
Police arrested 150 people who were involved in a road blockade on Thursday on behalf of the Tamil Nadu Primary Education Teachers' Movements Joint Action Committee (Tito-Jac)