உங்கள் ஊரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்போது? அறிந்துகொள்ள எளிய வழி!
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி: தனிப்படை விசாரணை
பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தைலாபுரம் தோட்டத்திலுள்ள வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளர்களுடன் பேசுகையில், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதை யாா் வைத்தாா்கள்?, எதற்காக வைத்தாா்கள்? என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.
தனிப்படை விசாரணை
இந்தநிலையில், பாமக நிறுவனா் ராமதாஸின்தைலாபுரம் தோட்டத்திலுள்ள வீட்டில் இருக்கையின் அருகே விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்த புகார் குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தைலாபுரம் வீட்டிற்குச் சென்றுள்ள தனிப்படை போலீஸார், தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.