செய்திகள் :

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டது; பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படுகிறாரா?

post image

கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. அதில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.

முதல் மூன்று போட்டிகளில் கருண் நாயர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார். இந்த போட்டிகளில் அவருக்கு கிடைத்த நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக அவரால் மாற்ற முடியவில்லை. இதன் காரணமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான தீப் தாஸ்குப்தா பேசியதாவது: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சாய் சுதர்ஷனை மீண்டும் சேர்க்கும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன். லார்ட்ஸ் டெஸ்ட்டில் வெற்றிக்கு மிக அருகில் சென்று இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் இருந்தது.

இந்த போட்டியில் நான் 3-வது வீரராக களமிறங்கும் கருண் நாயரை கவனித்தேன். இளம் வீரரான சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பளிக்காமல் தொடர்ச்சியாக கருண் நாயருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமா? முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சாய் சுதர்ஷன் நன்றாக விளையாடினார். அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஜூலை 23 முதல் மான்செஸ்டரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

It is said that Karun Nair's time is up and he is unlikely to be included in the playing eleven for the next match.

இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம்: டாப் 10-இல் 5 ஆஸி. வீரர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு... மேலும் பார்க்க

டி20 தொடரைக் கைப்பற்றி இலங்கையில் வரலாறு படைத்த வங்கதேசம்!

இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான ... மேலும் பார்க்க

உலகக் கோப்பை தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை: தீப்தி சர்மா

உலகக் கோப்பைத் தொடர் குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் த... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம்: டாப் 10-இல் 5 ஆஸி. வீரர்கள்!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக டாப் 10இல் 5 ஆஸி. வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கிரிக்கெட் உலகில் அதிகமான உலகக் கோப்பைகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தி வருகிறது. கடந்த... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள ஆஸி. அணி 3-0 என டெஸ்ட் தொடரை வென்றது. அடுத்தத... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆண்ட்ரே ரஸல் ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மேற்கத்திய தீவுகள் அணியில் ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.மேற்கத்திய தீவுகள் அணிக்காக 2019 முதல் விளையாடி வரும் ஒரே மூத்த வீரரான ரஸல் (வயது 37) ஜ... மேலும் பார்க்க