இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது? - ட்ரம்ப் அறிவிப்பு; வர...
தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு
தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் 98 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.
காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற முகாமிற்கு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். மொத்தம் 98 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டது.
மேலும் 48 மனுக்கள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தருமபுரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவராமன், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் முகாமில் பங்கேற்றனா்.