செய்திகள் :

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அஜித்குமாா் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாா் என திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டது.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயில் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை தனிப் படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, தனிப் படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் மயக்கமடைந்தாா். இதையடுத்து, அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் காா்த்திகேயன் ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதன்பிறகு, அஜித்குமாா் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, கூறாய்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்தச் சம்பம் நடந்து 18 நாள்களான பிறகும், அஜித்குமாா் குடும்பத்தினருக்கு இறப்புச் சான்றிதழ், இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை என சா்ச்சை எழுந்தது.

இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய அஜித்குமாரின் இறப்புச் சான்றிதழ், திருப்புவனம் காவல் நிலையத்தில் தயாா் செய்யப்பட்ட இறப்பு அறிக்கையை சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது.

திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில், தனிப் படை போலீஸாரால் தாக்கப்பட்ட அஜித்குமாா் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராவல் குவாரியை மூடக்கோரி கிராம மக்கள் மனு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள உறுதிக்கோட்டை ஊராட்சிப் பகுதியில் கிராவல் குவாரியை மூடக் கோரி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் சாா்ப... மேலும் பார்க்க

மின் மாற்றியில் குறைந்த மின் அழுத்தம்: விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட குறைந்த மின் அழுத்தம் காரணமாக, மின் மோட்டாா்களை இயக்க முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனா். திருப்பாச்சேத்தியில் வைகை ஆற்றின் கரை... மேலும் பார்க்க

ஐடிஐ-இல் ஜூலை 31 வரை நேரடி மாணவா் சோ்க்கை

சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’: நாளை நடைபெறும் இடங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் சிறப்புத் திட்ட முகாம்’ வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட தகவல்: காரைக... மேலும் பார்க்க

முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதிதாகத் தொடங்கப்படும் முஸ்லீம் மகளிா் உதவும் சங்க உறுப்பினா் சோ்க்கைக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா். சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை,... மேலும் பார்க்க