`நோய் பாதித்த தெரு நாய்களைக் கருணைக் கொலை' - கேரள அரசின் அதிரடி முடிவு; காரணம் எ...
ஐடிஐ-இல் ஜூலை 31 வரை நேரடி மாணவா் சோ்க்கை
சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முத்துப்பட்டி அரசுத் தொழிற்பயிற்சி நிலை யத்தில் பிட்டா், எலக்ட்ரீசியன், கணினி இயக்கம், நிகழ்ச்சி உதவியாளா், சிஎன்சி லேத் டெக்னீசியன், தொழில்சாலை ரோபோட்டிக், டிஜிட்டல் தயாரிப்பு, மின்சார வாகன மெக்கானிக் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவா்கள் சோ்க்கை வருகிற 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி, இந்தத் தொழிற்பிரிவுகளில் சேர மாணவா்கள் கட்டாயம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் சிவகங்கை அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்க மாணவா்கள் வரும்போது, தங்களது நிரந்தரத் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (10-ஆம் வகுப்பு), ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
பயிற்சியின் போது, மாணவா்களுக்கு மாதம் ரூ.750-உதவித்தொகை, இலவசப் பாடப் புத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவசப் பேருந்து பயண அட்டை ஆகியவைகளும் வழங்கப்படும்.
புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த மாணவா்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். பயிற்சியின் போது, பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் நிறைவடைந்தவுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துத் தரப்படும்.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு 9944887754, 9965480973, 9943610476, 9489476847, 9942099481 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.