செய்திகள் :

கைகொடுக்காத நீட்; 20 வயதில் Rolls Royce-ல் ரூ.72 லட்சம் சம்பளம்! - கிராமத்து மாணவி சாதித்தது எப்படி?

post image

கர்நாடகா மாநிலம் தீர்த்தஹலி தாலுகாவில் கொடுரு கிராமத்துப் பகுதியைச் சேர்ந்தவர் ரிதுபர்ணா. உயர்நிலைப் படிப்பு, PUC முடித்தவுடன் மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால், நீட் தேர்வின் தோல்வியால், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் படிப்பைப் தேர்வு செய்து படித்திருக்கிறார்.

மங்களூர் சஹ்யாத்ரி பொறியியல் கல்லூரியில் படித்த ரிதுபர்ணாவிற்கு ஆரம்பத்தில் இப்படிப்பின் மீது பெரிதாக ஆர்வமில்லை என்று கூறுகிறார். நாள்கள் போகப்போக சீனியர்களின் ப்ராஜெக்ட் வேலைகளில் கலந்துகொண்டு ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பற்றி கற்றுக் கொண்டிருக்கிறார். அதுதான் ரோபாட்டிக்ஸ் மீதான ஆர்வத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறது என்கிறார்.

ரிதுபர்ணா

விவசாயத்தில் ரோபாட்டிக்ஸ்

அவரின் முதல் ப்ராஜெக்ட்டே விவசாயத்தில் ரோபாட்டிக்ஸைப் பயன்படுத்துவதாக இருந்தது. நண்பர்களுடன் இணைந்து ரோபாட்டிக்ஸ் மூலம் அறுவடை மற்றும் மருந்துத் தெளிப்பு உள்ளிட்டவை பற்றிய ப்ராஜெக்ட்களைச் செய்திருக்கிறார். மங்களூர் தேசிய தொழில்நுட்பக் கழகமான 'NITK Surathkal' தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுவிலும் பணியாற்றியிருக்கிறார்.

அறுவைச் சிகிச்சை மருத்துவர்களிடம் கலந்துரையாடி மருத்துவ அறுவைச் சிகிச்சையில் ரோபாட்டிக்ஸைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் ப்ராஜெக்ட்டுகள் செய்திருக்கிறார். மங்களூர் துணை ஆணையர் முல்லை முகிலன் திட கழிவு மேலாண்மை திட்டத்திலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகப் பணியாற்றியிருக்கிறார் ரிதுபர்ணா.

இப்படியான பல சிறந்த ரோபாட்டிக்ஸ் ப்ராஜெக்ட் பணிகளுக்காக கோவாவில் நடைபெற்ற INEX போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் பெற்றார். அந்த நிகழ்வில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்ற நிலையில், ரிதுபர்ணாவின் ப்ராஜெக்ட் ஐடியா அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இத்தனை பணிகளையும் கல்லூரி படிக்கும்போதே ஆர்வத்துடன் செய்திருக்கிறார் என்பதுதான் அவரது எதிர்கால சாதனைகளுக்கு அடித்தளமாக அமைத்திருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் இன்டெர்ன்ஷிப்

ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியலை ஆர்வத்துடன் கற்றுக் கொண்டு, பல ப்ராஜெக்ட்களில் பணியாற்றியிருக்கும் ரிதுபர்ணா, நம்பிக்கையுடன் தனது எதிர்கால வாழ்க்கைக்கான அடுத்தப் பெரும் அடியை எடுத்து வைத்தார். உலகின் முன்னணி, உயர் ரக ஆடம்பரக் கார்களை உற்பத்தி செய்யும்ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இன்டெர்ன்ஷிப்பில் பயற்சிக்காகப் பணியாற்றுவதற்கு விண்ணப்பத்திருக்கிறார்.

’இந்த நிறுவனத்தில் வேலை செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தரப்பில் ரிதுபர்ணாவிடன் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. 'வாய்ப்பு கொடுங்கள் நிரூப்பித்துக் காட்டுகிறேன்' என்று பதிலளித்த ரிதுபர்ணாவிற்கு ரோல்ஸ் ராய்ஸ், 'ஒரு மாதத்தில் முடிக்கக் கூடிய வேலையை ரிதுபர்ணாவை சோதிப்பதற்காகக் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் தெரியாமல், மிகக் கடுமையாக பணியாற்றிக் கற்றுக் கொண்டு ஒருமாத வேலையை, ஒரே வாரத்தில் முடித்துக் காட்டியிருக்கிறார்.

இதையடுத்து அடுத்த 8 மாதங்களுக்கு தொடர்ந்து இதுபோல பல டாஸ்க்குகளைக் கொடுத்திருக்கிறது. பயிற்சி மேல் பயிற்சி எடுத்து தெரியாதவற்றைக் கற்றுக் கொண்டு அவற்றையெல்லாம் அசராமல் முடித்துக் காட்டியிருக்கிறார். 2024ம் ஆண்டில் தனது 6 வது செமஸ்டரில் கல்லூரி படிப்போடு சேர்த்து, இந்த அத்தனை வேலைகளையும் பார்த்திருக்கிறார் ரிதுபர்ணா.

குடும்பத்துடன் ரிதுபர்ணா

அமெரிக்க பறக்கும் ரிதுபர்ணா, சம்பளத்தை உயர்த்திய ரோல்ஸ் ராய்ஸ்

இந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இரவு 12 முதல், காலை 6 மணிவரை வீட்டிலிருந்தபடி பணிபுரிந்திருக்கிறார். இந்த 7வது செமஸ்டர் கல்லூரி படிப்பை முடித்தக் கையோடு அமெரிக்காவிற்குப் பறக்கவிருக்கிறார். அங்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் டெக்ஸஸ் கார் தயாரிப்பு யூனிட்டில், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் பணியாற்றவிருக்கிறார்.

ஆரம்பத்தில் ரிதுபர்ணாவிற்கு ஆண்டுக்கு 39.6 LPA என கூறப்பட்டிருந்தது. ஆனால் அவரது ஆர்வத்தையும், திறமையையும் பார்த்த ரோல்ஸ் ராய்ஸ் ஆண்டுக்கு ரூ.72.3 லட்சம் (LPA) என சம்பளத்தை உயர்த்தியிருக்கிறது. கல்லூரியை முடித்தக் கையோடு அமெரிக்காவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஜெட் இன்ஜின் தயாரிப்புப் பிரிவில் அவருக்கான வேலையும் தயாராக இருக்கிறது. கல்லூரி படிக்கும் தனது 20 வயதிலேயே எதையும் துணிந்து, நம்பிக்கையுடன் கற்றுக் கொண்டு கனவை எட்டிப் பிடித்த ரிதுபர்ணாவிற்கு இன்னும் பல கனவுகளும், சாதனைகளும் அவரிடம் வந்து சேர காத்திருக்கிறது.

வாழ்த்துகள் ரிதுபர்ணா

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

மராத்திக்கு எதிரான பேசினாரா ராஜஸ்தான் இளைஞர்? அடித்து ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற ராஜ் தாக்கரே கட்சி

மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியினர் மராத்திக்காகவும், மராத்தி மக்களுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் கட்டாயம் மராத்தி பேச வேண்டும் என்ற... மேலும் பார்க்க

இங்கிலாந்து ஏலத்தில் விற்கப்பட்ட மகாத்மா காந்தியின் எண்ணெய் ஓவியம்; எத்தனை கோடிக்குத் தெரியுமா?

மகாத்மா காந்தி வரைவதற்கு அவர் அமர்ந்த ஒரே ஓவியம் இதுதான் என்று நம்பப்படுகிறது. இந்த அரிய எண்ணெய் ஓவியம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 175 கோடி ரூபாய்க்கு (சுமார் 17 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாக... மேலும் பார்க்க

`கயிறுக்கு முன்னால் ஊசலாடும் உயிர்' - மன்னிப்பா? மரணமா? - நிமிஷா பிரியாவின் வழக்கில் நடந்தது என்ன?

``எப்படி துருதுருனு திரிஞ்சிட்டு இருந்த புள்ள அது தெரியுமா... ட்ராக்டர் ஓட்டும், வயலுக்கு போயி விவசாய வேலைக்கூட பார்க்கும். படிப்புலயும், எதிர்காலம் பத்தின சிந்தனையும் ரொம்ப அதிக கவனமா இருப்பா. எப்படி... மேலும் பார்க்க

உலக எமோஜி தினம் 2025: மக்களின் உணர்வுகளை எளிதில் சொல்லும் எமோஜிகள் - எப்போது தொடங்கியது தெரியுமா?

இன்றைய டிஜிட்டல் உலகில் எமோஜிகள் நம் அன்றாட பயன்படுத்தும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் தொடங்கி இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என எல்லா சமூக வலைதளங்களிலும் இந்த எமோஜிகளை பயன்படுத்துகின்றோம். வார்த்தைக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: பனியன், துண்டுடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

மும்பையில் கடந்த வாரம் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் சட்டமன்ற உறுப்பினர் விடுதி கேண்டீனில் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பருப்பு குழம்பு கெட்டுப்போய் இருந்தது.இதையடுத்து சஞ்சய்... மேலும் பார்க்க

3000 பீர்கேன்கள், மலம், சிறுநீர் பைகள்; வீடு வாடகைக்கு விட்ட தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (58) ஆகியோர் கடந்த 2018 ஆம் ஆண்டு தங்களின் மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்ட... மேலும் பார்க்க