kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
மதராஸி அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் மதராஸி திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் 23-வது படமான இப்படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றதுடன் இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதராஸி வெளியாக இன்னும் 50 நாள்கள் இருப்பதாகத் தெரிவித்து சிவகார்த்திகேயன் புதிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இது அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: வெயில், புழுதி, அறுவைச் சிகிச்சை... மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே உருக்கம்!