kamarajar: `கட்டுக்கதை DMK' - கொதிக்கும் Congress | குழப்பும் Annamalai | Imperf...
Alaska Earthquake: அலாஸ்காவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பீதியில் மக்கள்!
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நேற்று 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
USGS வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த நிலநடுக்கம் அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி மதியம் 12.37 மணிக்கு ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அலாஸ்காவின் தலைநகரான ஆங்கரேஜ் நகருக்கு அருகே, கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அதிர்வுகள் காரணமாக, கடலோரப் பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. முதலில் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக சாண்ட் பாயிண்ட் உள்ளது.
இது அலூசியன் தீவுகளில் உள்ள போபோஃப் தீவில் சுமார் 580 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய கிராமமாகும். உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக குடியிருப்பாளர்களை எச்சரித்து, உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சுனாமி எச்சரிக்கை மையம் இந்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.