பல்லடம் மூவர் கொலை வழக்கு: 8 மாதங்களுக்குப் பின் கிணற்றில் இருந்து செல்போன் மீட்...
Kerala Nurse: ``பிளட் மணி வேண்டாம்; தண்டனை கிடைத்தே ஆக வேண்டும்..'' - ஏமன் குடும்பம் சொல்வதென்ன?
ஏமனில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்காக கிராண்ட் முஃப்தி ஷேக் காந்தபுரம் ஏ.பி ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிளட் மணி!
ஏமன் அடிப்படையில் இஸ்லாமிய ஷரியா சட்டப்படி இயங்குகிறது. ஷரியா சட்டத்தின் படி, தெரியாமல் நடந்த ஒரு குற்றத்திற்கு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு குற்றவாளி 'பிளட் மணி' வழங்கலாம். இது பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ஒத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியம்.
நிமிஷாவை பிளட் மணி கொடுப்பது மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது.
கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் கூறுவது என்ன?
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தலால் அப்தோ மெஹ்தியின் சகோதரர் அப்தெல்ஃபத்தா மெஹ்தி, "உண்மையை மறக்க முடியாது. தண்டனை தாமதமானாலும், அதை ரத்து செய்ய முடியாது.
எந்தவொரு நஷ்ட ஈடும் உயிரை ஈடு செய்ய முடியாது. நீதி வெல்ல வேண்டும்.
தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. நாங்கள் எந்தவித அழுத்தத்திற்கும், பிளட் மணிக்கு அடிப்பணிய மாட்டோம்.
கடவுளின் அருளால், தண்டனை நிறைவேற்றப்படும்" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால், 'இந்திய அரசின் முயற்சி என்ன ஆகும்?' என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.