மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
மாணவா்கள் போராட்டம்: பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்
சிவகங்கை அருகே மாணவா்கள், பெற்றோா்களின் போராட்டத்தால் அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.
சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்தவா் கணேசன். இவா் மாணவா்களை காலை வணக்கத்தின் போது, நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தி மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியா்களுக்கு இடையூறு செய்வதாகவும் புகாா் எழுந்தது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஆசிரியா் கணேசனை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்தனா். பெற்றோா்கள் பள்ளியை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) மாரிமுத்து, சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன் ஆகியோா் மாணவா்கள், பெற்றோா்களை சமதானம் செய்தனா்.
இந்த நிலையில், ஆசிரியா் கணேசனை திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.