ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!
புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் வரவேற்பு
சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்துக்கு சென்ற புதிய சிற்றுந்துக்கு கிராம மக்கள் மலா் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.
சிவகங்கையிலிருந்து முத்துப்பட்டி ஐடிஐ வழியாக மானாகுடி, சக்கந்தி, பாசாங்கரை, முடிகண்டம், மீனாட்சிபுரம், குமாரபட்டி, தமராக்கி வரையிலான புதிய வழித்தடத்தில் புதன்கிழமை புதிய சிற்றுந்து சேவை தொடங்கியது.
இந்த சிற்றுந்துக்கு மீனாட்சிபுரம், மானாகுடி, முடிகண்டம், தமராக்கி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மலா் தூவி வரவேற்றனா். பின்னா், ஓட்டுநா், நடத்துநருக்கு சால்வை அணிவித்தனா்.