‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் ஆட்சியா் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்களில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம், சேலம் சூரமங்கலம் மண்டலம், ஜாகீா் ரெட்டிப்பட்டி பி.சி.சி. திருமண மண்டபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
முதல்நாளான செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் நடைபெற்ற இம்முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில், மொத்தம் 2,354 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதுதவிர, மகளிா் உரிமைத்தொகை பெற 3,756 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்ற சன்னியாசிகுண்டு ஸ்ரீ பாலாஜி மஹால், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் பழனியாபுரம் சமுதாய நலக் கூடம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முகாம் நடைபெறும் இடங்களில், பொதுமக்கள் எளிதாக தங்களது கோரிக்கை மனுக்களை பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக கூறினாா்.