நிஃப்டி 25,200 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 82,634.48 புள்ளிகளுடன் நிறைவு!
மும்பை: பலவீனமான உலகளாவிய சந்தை போக்கும், கட்டணங்கள் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் மத்தியில் முதலீட்டாளர்கள் ஓரங்கட்டப்பட்டதால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஓரளவு உயர்ந்து முடிந்தன.
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உயர்ந்த நிலையில், இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் அதிகபட்சமாக 82,784.75 புள்ளிகளும் அதே வேளையில் குறைந்தபட்சமாக 82,342.94 புள்ளிகளை எட்டியது. 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 63.57 புள்ளிகள் உயர்ந்து 82,634.48 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 16.25 புள்ளிகள் உயர்ந்து 25,212.05 ஆக நிலைபெற்றது.
துறைகளில் உலோக குறியீடு 0.6 சதவிகிதமும், மருந்து குறியீடு 0.3 சதவிகிதம் சரிந்தது. அதே நேரத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, எஃப்எம்சிஜி, ஐடி, பொதுத்துறை வங்கி மற்றும் மீடியா குறியீடுகள் 0.5 முதல் 1.8 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தன.
சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, டெக் மஹிந்திரா, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் எடர்னல், சன் பார்மா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன.
நிஃப்டி-யில் மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ, எஸ்பிஐ, நெஸ்லே இந்தியா மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை உயர்ந்த நிலையில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எடர்னல், சன் பார்மா, டாடா ஸ்டீல் மற்றும் சிப்லா ஆகிய பங்குகள் சரிந்தன. மிட் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் நிஃப்டி-யில் இன்று சமமாக முடிவடைந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், ஜூன் காலாண்டில் - இபிஐடிடீஏ (EBITDA) 69% உயர்ந்ததால் நெட்வொர்க் 18 மீடியா பங்குகள் 12 சதவிகிதம் உயர்வு.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் பங்குகள் 3 சதவிகிதம் சரிவுடன் முடிந்த நிலையில் டிக்சன் டெக் பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தது. காபி டே பங்குகள் 20 சதவிகிதம் உயர்வுடன் முடிந்த நிலையில் டோலி கன்னா பங்குகளை வாங்கியதால் 20 மைக்ரான்கள் நிறுவன பங்குகள் 15 சதவிகிதம் உயர்ந்தது.
ராம் இன்ஃபோ லிமிடெட் பங்குகள் 5 சதவிகிதமும், ஷில்பா மெடிகேர் பங்குகள் கிட்டத்தட்ட 5 சதவிகிதமும், காலாண்டு நிகர லாபம் 54 சதவிகிதம் உயர்ந்த பிறகு ஐடிசி ஹோட்டல் பங்குகள் 4.5% உயர்ந்தது.
ஷ்னீடர் எலக்ட்ரிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ், ஆர்பிஎல் பேங்க், நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட், அசாஹி இந்தியா, எம்ஆர்எஃப், குளோபல் ஹெல்த்கேர், பயோகான், எச்டிஎஃப்சி ஏஎம்சி, ஈஐடி பாரி, யுடிஐ ஏஎம்சி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் எட்டியது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்தன.
ஐரோப்பிய சந்தைகள் கலவையான நிலையில் வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.
இதையும் படிக்க: இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை 1,878 டாலராகச் சரிவு