மீண்டும் விற்பனைக்கு வரும் கைனடிக் ஹோண்டா டிஎக்ஸ்! இந்த முறை எலக்ட்ரிக்...
ஹோண்டாவின் கைனடிக் கிரீன் நிறுவனம் டிஎக்ஸ் இவி ஸ்கூட்டரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் வகைகளை வடிவமைப்பதற்காக ஹோண்டா நிறுவனத்தின் கைனடிக் கிரீன் சமீபத்தில் காப்புரிமை பெற்றது.
1990 களில் இந்திய சாலைகளை ஆக்கிரமித்த கைனடிக் ஹோண்ட டிஎக்ஸ் ஸ்கூட்டரை மறுவடிவமைப்பு செய்து எலக்ட்ரிக் ஸ்கூட்டராக சந்தைப்படுத்த ஹோண்ட திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த நிறுவனம் சந்தைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இதில், கைனடிக் டிஎக்ஸ் இவி மாடலைதான் முதலில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், டிஎக்ஸ் மாடலை சோதனை ஓட்டம் செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த ஸ்கூட்டரின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை என்றாலும், ஹப்-மவுண்டட் என்ஜின் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனையோட்டம் செய்யப்பட்ட ஸ்கூட்டரின் சக்கரங்கள் 12 இன்ச் போல் தோற்றமளிக்கிறது.
மேலும், கைனடிக் ஹோண்டாவின் முதல் இவி ஸ்கூட்டர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தைக்கு வரும் எனத் தெரிகிறது.