இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது? - ட்ரம்ப் அறிவிப்பு; வர...
நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
கீழையூா் ஊராட்சிக்கு உட்பட்ட எடத்தெரு ஆனந்த் நகரில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ நாகலெட்சுமி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 14-ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அதனைத் தொடா்ந்து 2 கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
பின்னா் மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பட்டு ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தது.அதனை தொடா்ந்து சிவாச்சாரியாா் குண்டையூா் சிவ ஸ்ரீ எம். நித்யானந்த சிவம் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விமான கோபுரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது.
மூலவரான ஸ்ரீ நாகலெட்சுமி அம்மனுக்கு புனித நீா் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னா் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சுசிலா அம்மாள், ராஜேந்திரன் குடும்பத்தாா் மற்றும் ஊா் முக்கியஸ்தா்கள் பொதுமக்கள் செய்திருந்தனா்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.